Posts

Showing posts from October, 2018

வெளியில் ஒருவன் – கார்த்திகைப் பாண்டியன் கதைகள்

கார்த்திகைப்பாண்டியன் கதைகளில் ஒரு இளைஞன் இருக்கிறான். மரணம் மற்றும் வாழ்வின் நிலையாமை குறித்த தொந்தரவூட்டும் எண்ணங்கள், நுரைத்துப் பொங்கும் காமத்தின் வேட்கையைத் தணித்துக்கொள்ள வடிகால்கள் இல்லாமை, புறவுலகில் எதிர்கொள்ள நேரும் எதிர்மறையான அபத்தக்காட்சிகள் போன்றவை அவனுடைய பிரத்யேகமான தன்னிலையிலிருந்து கிளைத்தெழும் வாழ்க்கைச் சிக்கல்களாக இருக்கின்றன.

காதுகளும் குரல்களும்

மா லி யார்? அவன் ஒரு எழுத்தாளன். அவனுடைய பால்யத்தையும் பூர்வ கதையையும் பார்க்கையில் குடும்பம் முழுமையாக வறுமைக்குள் வீழும் வரை செழிப்பாக வாழ்ந்தவனாகவே இருக்கிறான். மகா கூச்ச சுபாவி. அவன் தந்தையாரும் என்னென்னவோ செய்து பார்க்கிறார். ம்ஹும் , ஒன்றும் நடப்பதாயில்லை. மனிதர்களோடு புழங்கக் கூச்சப்படுவர்கள் சங்கீதம், ஓவியம், புத்தகம் மாதிரி ஏதோவொன்றில் தஞ்சமடையும் பொதுவிதியின் அடிப்படையில் மகாலிங்கம் புத்தகங்களின் பக்கம் ஒதுங்கி எழுத்தாளனாகிவிடுகிறான். சங்கீதம் அவனுக்கு செட் ஆகவில்லை.

பள்ளிகொண்டபுரம்

Image
                                                       பள்ளிகொண்டபுரம் வெளியாகி கிட்டத்தட்ட நாற்பத்தெட்டாண்டுகள் ஆகி செவ்வியல் நாவலுக்கான அந்தஸ்த்தையும் அடைந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு ஒரு கிளாசிக் வரிசை வெளியிட்டபோது முதன்முதலாக இந்த நாவலை வாசித்தேன்.

நெடுந்தொடர்கள்

Image
                                                       வெளியே வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே இறங்கியிருக்க நிலமெங்கும் உறைந்திருந்த பனியின் வெண்மையால் இருள் சற்றே வெளிறியிருந்தது. அந்த முன்னிரவில் GOT இன் முதல் பருவத்தின் முதல் அத்தியாயத்தில் அத்தனை பிரம்மாண்டமான ஒரு பனிச்சுவரைப் பார்த்தபோது கணினித்திரையின் காட்சியிலும் வெளியிலும் நிரம்பியிருந்த பனியை இணைத்து ஒரு வினோதமான உணர்வு தோன்றியது.

சிவப்பு ஏப்ரல்

Image
லத்தீன் அமெரிக்க நாவல்களைப் பொறுத்தவரை ஏராளமான பெயர்கள் முப்பதாண்டுகளாக தமிழில் புழங்குகின்றன. அவர்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு தமிழ் வாசகர்கள் நகரவேண்டும் என்ற குரல்கள் தற்போது ஒலிக்கின்றன. சரிதான். போர்ஹேஸ், மார்க்கேஸ் போன்றோரின் படைப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்டு அவர்கள் தமிழர்களாகிவிட்டனர்.