இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இருண்மையின் ஆழங்களில் மிதக்கும் சிலுவை நிழல்-பாலைநிலவன் கதைகள்

பதினேழு கதைகளைக் கொண்டிருக்கும் இந்த தொகுப்பில் பாலைநிலவன் தமிழின் மரபார்ந்த கதையுலகங்களிலிருந்தும் கதை மொழியிலிருந்தும் சற்றே விலகி இருண்மையின் மகா ஆழத்திலிருந்து கதைகளை பிரசங்கிக்கிறார்.அது காட்டிக் கொடுப்பவர்களின் கதைகளாகவும் ,சிலுவையில் அறையச்சொல்லி கூக்குரலிட்டவர்களின் கதைகளாகவும்,அறியாமல் செய்கிறவர்களின் பிழை பொறுக்க இறஞ்சிய தேவதூதனின் கதைகளாகவும் இருக்கின்றன.