Posts

Showing posts from February, 2026

மொழிபெயர்ப்பின் நிறம் - ஆர்.சிவகுமார் கருத்தரங்கு

Image
நேற்று 22-02-2026 அன்று சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் மொழிபெயர்ப்பாளர் திரு. ஆர்.சிவகுமார் அவர்களுடைய மொழியாக்கப் படைப்புகள் குறித்த ஒருநாள் நிகழ்வை ஆகுதி அமைப்பு சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தது. நான் மதியம் பனிரெண்டு மணியளவில் சென்றேன். அரங்குக்கு வெளியே நூல்வனம் மணிகண்டன் மட்டும் தனியே யாரோவொரு நண்பருக்காகக் காத்திருந்தார். முழுநாள் நிகழ்விலும்  நான்   பார்வையாளராகப் பங்கெடுத்துக்கொண்டேன். சிறப்பாகப் பேசிய உரையாளர்களின் பேச்சாற்றல் மீது சிறிய பொறாமை எழுந்தது என்னவோ உண்மைதான்.