இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்தாளர் தன் சமகாலப் படைப்புகளைப் பேசவேண்டுமா?

படம்
புத்தகங்களை நோக்கிய திரைத்துறையினரின் அணுகுமுறை குறித்து சற்றே வேடிக்கையோடு எழுதிய முந்தைய பேஸ்புக் பதிவைத் தொடர்ந்து க.விக்னேஸ்வரன் எழுதிய குறிப்பில் ‘எழுத்தாளர்கள் வாசிக்கிறார்களா, எத்தனை எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்துப் பேசுகிறார்கள்?’ என்ற முக்கியமான கேள்விகளை எழுப்பியிருந்தார். இது அவற்றுக்கான பதில் அல்ல, ஆனால் அந்தக் கேள்விகளினால் எழுந்த யோசனைகள். இலக்கியம் சார்ந்த அரசியல் சரிநிலையோடு பேச வேண்டும் என்பது இங்கே என் நோக்கமாக இல்லை, தனிப்பட்ட மனச்சாய்வுகள், முன்னூகங்கள், சரியானதும் பிழையானதுமான புரிதல்கள் எல்லாம் இணைந்ததாகவே விஷயங்களைச் சொல்கிறேன். இலக்கிய வரலாற்று நோக்கில் தமிழ் நவீன இலக்கியத்துக்கு இது மூன்றாவது தலைமுறை. புதுமைப்பித்தன் தொடங்கி மணிக்கொடி, கசடதபற, நடை உள்ளிட்ட நவீனத்துவத்தின் தாக்கத்தில் உருவானது முதல் தலைமுறை. வலுவான சிற்றிதழ் இயக்கம், லத்தீன் அமெரிக்க இலக்கியத் தாக்கம், கோட்பாட்டுத் தாக்கம், இடதுசாரி அரசியல், தலித்தியம், பெண்ணியம் என்று இரு தசாப்தங்களுக்கு மேலே இரண்டாவது தலைமுறை நீடித்தது. உலகமயமாக்கலும் முதலாளித்துவமும் தொழில்நுட்பமும் ஆ...

தேவநாயகி கருத்தரங்கு- இரண்டு உரைகள்

தேவநாயகி நிகழ்வில் ஜெ. மற்றும் அ.வெண்ணிலா ஆகியோருடைய உரைகளைக் கேட்டு, யூடியுப் டிரான்ஸ்க்ரிப்ஷனை வாசித்து எனது புரிதலின் அடிப்படையிலும் நுண்ணறிவுச் செயலியின் உதவியுடனும் இரு உரைகளிலும் உள்ள ஐந்து முக்கியக் கருத்தாக்கங்களை தொகுத்திருக்கிறேன்.

மரப்பாச்சி சந்திப்பு

படம்
கடந்த சனிக்கிழமை (29/08/26) அதிகாலை ஐந்தேகால் மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தில் இறங்கியவுடன் முதலில் கீழ்வானத்தில் இருந்த முழுமதி நிலவைத்தான் கண்டேன். கூடவே, சுனில் கிருஷ்ணனின் குருதிவழி நாவலில், காந்தியின் காரைக்குடி வருகையைச் சித்தரிக்கும் பகுதிகளும் நினைவுக்கு வந்தன. சமீப வருஷத்தில் புதிப்பிக்கப்பட்டதின் பொலிவோடு இருக்கும் ரயில் நிலையத்தின் தூய்மை இதமளித்தது. அழைத்துச்செல்ல வந்திருந்த சுனிலிடம் இந்த ஊரின் ஆன்மா அல்லது இந்த ஊர்க்காரர்களின் அடிப்படையான பொதுக்குணம் என்னவென்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.