இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆபீஸ் - விமலாதித்த மாமல்லன்

படம்
புனைவிலக்கிய வடிவங்களில் நாவல் மிகுந்த ஜனநாயகத் தன்மையுடையது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் பெரிய சுதந்திரத்தை நாவல் அனுமதிக்கிறது. கதையின் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என்ற மரபான வடிவத்தை நாவல் கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை, வாசகனின் உணர்வுக்குவியத்தில் அது நாவலாக நிலைபெறுவதுதான் முக்கியமானது.

பா.கண்மணியின் இரு நாவல்கள்

படம்
பா.கண்மணியின் இடபம் மற்றும் வீனஸ் ஆகிய இரு நாவல்கள் நவீனகால இந்தியப் பெண்ணின் தன்னிலையைப் பேசுகிற நாவல்கள். இடபம் சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்திருந்தாலும் வாசிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கவில்லை. டாங்கோ நாவல் வெளியானபிறகு, லதா அருணாச்சலம் தான் இடபம் நாவலைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார். இடபம் வாசித்தபிறகு எனக்கு அது ஒருவிதத்தில் டாங்கோவின் சந்தியாவைப் போன்ற ஒரு பெண்ணைக் குறித்த நாவலாகத் தெரிந்தது.

அண்மை அடையாளங்கள்

உளவியலில் Propinquity Theory என்றொரு கோட்பாடு இருக்கிறது, தமிழில் நாம் எளிமையாக அண்மைக் கோட்பாடு என்று வைத்துக்கொள்ளலாம். இதன் விஷயம் சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்ததுதான். அருகருகே வசிக்கும் அல்லது அன்றாடம் புழங்கும் மனிதர்களுக்கிடையிலான பரிச்சயம்தான் ஓப்பிட்டளவில் அதிகமும் நட்பாகவோ காதலாகவோ தொழில் உறவாகவோ மாறுகிறது. சக மனிதர்களின் குணங்களையும் இயல்பையும் அறிந்துகொள்வதால் ஏற்படும் நம்பிக்கை அளிக்கக்கூடிய “நம்மவர்” என்ற உணர்வு மனிதர்களுக்கு எல்லா நிலைகளிலும் முக்கியமானதாக இருக்கிறது. புறவய அண்மையோடு சேர்த்து ஜாதி, ஊர், மதம் ஆகிய “அண்மை அடையாளங்கள்” நிறுவனங்களாக மாறி பெரிய வலிமையை அடைந்திருக்கின்றன. உங்களுடைய வாழ்க்கையில் இந்த அண்மை அடையாளங்களைச் சார்ந்தவர்களே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இதில் நட்பை மட்டும் ஒரு விதிவிலக்காகச் சொல்லலாம். ஆனால் அதிலும் குறைந்தபட்சம் பெளதீகமாகவேனும் ஒருவர் இந்த ”அண்மை அடையாள வெளிகளைக்” கடக்க வேண்டும், இடம் பெயரவேண்டும், வெவ்வேறு கலாச்சாரங்களோடு வினைபுரிய வேண்டும், இல்லாவிட்டால் உங்களுடைய நண்பர்களும் நீங்கள் சார்ந்திருக்கும் அடையாள வெளியைச் சார்ந்த...