Apr 20, 2015

அங்கே அணைகிறது ரத்தம்

கைவீசம்மா கை வீசு
சருகில் இருந்த பச்சை
எங்கே போனது?
இலையில் பச்சை வந்த
இடத்திற்கே
சருகில் இருந்த பச்சை போனது..
கைவீசம்மா கைவீசு
இலைக்கு எப்படி பச்சை வந்தது?
இலைக்கு வந்த பச்சை தெரியாதா?
ஆஹா
உறைந்த ரத்தம் உண்ட மண்ணே
எல்லா இலையிலும் பச்சை கொண்டது!
கைவீசம்மா கை வீசு
சிவப்பு எப்படி பச்சை ஆனது?
அய்யய்யோ இது தெரியாதா?
அணைந்த ரத்தம்
அடையும் நிறம் அதுதானே?
கைவீசம்மா கை வீசு
இரத்தம் செரித்து
பிறந்த பச்சை அழகாய் மின்னுது!
கைவீசும்மா கை வீசு!
பச்சை வேணும் என்றால்
இரத்தம் அணைய வேணுமா?
கைவீசம்மா கை வீசு
கைவீசம்மா கை வீசு!
ஆமாம் ஆமாம்
இலையில் மின்னும் பச்சை எல்லாம்
நேற்று கொதித்த ரத்தம்!!!
இலையில் நாளை மின்னும்
இன்று கொதிக்கும் ரத்தம்!
கை வீசம்மா கை வீசு!!
அழகாய் மின்னுது பச்சை
அழகாய் மின்னுது பச்சை
அங்கே அணையுது ரத்தம்
அங்கே அணையுது ரத்தம்.

No comments: