Oct 26, 2024

நெருப்புக்கோழி நெஞ்சம்

பொந்துக்குள் மறையும்போது
நெளிந்த
அதன் வால்நுனியை மட்டும்
பார்த்தேன்
பாம்போ பல்லியோ
பட்டால் தீருமோ
பயந்து நடுங்கி
கல்லைப்போட்டு
மண்ணை வீசி
பொந்தை அடைத்து
என் தலையை
மண்ணில்
பத்திரப்படுத்தினேன்.

No comments: