எதிர்போன முகங்களில்
அர்த்தத்தை ஏந்திவிட்ட நிறைவும்
பசி தணிந்த அமைதியும்
வழக்கம்போல் எனக்கு
இதிலும் நேரங்கடந்துவிட்டது
முன்னால் யாருமில்லை
நொடிக்கொருதரம் திரும்பிப் பார்க்கும்
என் கண்களில்
சிறுத்து மறைகின்றன முதுகுகள்
தோளில் கனக்கிறது இன்மை
சேருமிடமோ
கண்ணுக்கு அண்மித்து
கால்களுக்கு மாயங்காட்டுகிறது
இருளும் வேளையில்
நா வறண்டு களைத்து
பாதையோரம் அமர்ந்தவன்
வானிருந்த மூன்றாம்பிறை கண்டேன்
கீற்றாய் ஒரு தரிசனம்
காற்றாய் இக்கணம் நடக்கிறேன்
என் இன்மை கனக்கவேயில்லை.
No comments:
Post a Comment