Oct 26, 2024

இறந்தகாலம் இன்னும் முடியவில்லை

இறந்தகாலம் இன்னும் முடியவில்லை
மறையும் அடுத்த கணத்திற்குள்
மெளனமாய் அது கரைந்துகொண்டிருக்கிறது
என்ற ஆக்டோவியா பாஸின்
கவிதை வரிகளை வாசித்தபோது
வரலாற்றின் எழுதப்படாத வரிகளுக்குள்
அத்தனை பிணங்கள்
புதைக்கப்படாமல் கிடப்பது கண்டு
கனவுகள் நிர்மூலமாகும்
மூடுபனி இரவின்
இவ்வகாலத்தில்
உப்பைப் பொரியும்
இச்சொற்களிடையே
அவர்களைப் புதைத்தபின்
நானும் அவர்களும்
ஒரே காலத்தில்
உறங்குகிறோம்.

No comments: