வீடுகள்
கதகதப்பை சிருஷ்டிக்கும்
நள்ளிரவில்
இருளின் குளிர்படலம் மிதக்கிறது
தனிமைவீதியில்
லேசாக அசையும் நிழல்களுக்குள்
தூரத்து நாய்களின் ஒலியாய்
சாபக்குரல்கள் தேய்கையில்
மனிதர்கள் சவமாய் கிடக்கிறார்கள்
களைப்புற்ற உடலோடு ஒருத்தி
வீடு திரும்பும்போது
வீட்டிலிருந்து வெளியேறிய
பிதிர் கலங்கிய ஒருவன்
அவளைப் பிரக்ஞையற்றுக் கடக்கிறான்
திருடர்கள் ஊருக்குள் இறங்க
இன்னும் நேரமிருக்க
உலர்ந்துவிட்ட பியர்பாட்டிலை
இரவின் மீது வீசுகிறேன்
தெறித்த தன் இரத்தத்துளியை
நான் விரும்பிச்சுவைப்பது கண்டு
வன்மத்தில் பாய்ந்து
வேட்டைநாயைப் போல்
குதறி குற்றூயிராக்கிவிட்டது
துயரார்ந்தவர்களே...
யாரும் இரவின் மீது
பியர் பாட்டிலை வீசவேண்டாம்.
No comments:
Post a Comment