Apr 20, 2015

அதி மை

வெகு பழைய நிலவு
தன் மாறாப் பாதையில்
மிதக்கையில்
சில கணங்களாகத்தான்
கீழே நிற்கிறேன்
கண்களில் உதிரும்’
நிலவின் தண்ணொளியில்
கூடும் நிறைவின்
மெல்லிய மயக்கத்தோடு
இங்கே
கம்பி வலைகளுக்குள்
நின்று நான் பார்க்கும்
ஏக கணத்திலேயே
ஒரெ ஒரு பாறையாலான
மலை யுச்சியிலும்
பழைய அலை என்றொன்றில்லா
கரையிலும்
நின்றதையே நோக்குகிறேன்
போலவே
வேறு மானுடர்களும்
பார்த்துக் கொண்டிருப்பார்கள்
மிக எளிய இக்கணங்களில்
இராக்களில் உறங்காத
பட்சிகளுக்கும் மிருகங்களுக்கும்
எப்படியேனும்
இந்நிலவு அர்த்தப்படுமென்று தோன்றுகையில்
காலத்தில் நிறப்பது
அமைதி என்னும்
அதி மை.

No comments: