Apr 13, 2015

பிரேதங்கள் அலையும் இரவு

கடந்த
இன்றைய சந்தி
எனக்கொரு
சாவைக் கையளிக்கையில்
அபூர்வமழியும்
இறுதிக்கணமாயிருந்தது
வான்

திசையழிந்த இருளின்
தொலைவறியா ஆழத்தில்
பூத்த ஒளித்தளிர்களெல்லாம்
கழிந்த
பழங்கனவின் சாட்சியாக

அர்த்தத்தை இழந்துவிட்ட
ஓலத்துயரமொழியில் எழும்
சாமக்கூகையின் கதறல்
திசைகளில் வடிகிறது

நிறமழிந்த வன்ணத்துப்பூச்சிகள்
வந்து குழுமும்
என் வீடோ
இந்த நிமிஷத்தில்
கல்லறை நிலமாகிறது.

No comments: