Apr 13, 2015

கள்ளியின் மெளனம்

வெடித்த பாதங்கள்
கடக்கும்
வறண்ட இட்டேரிகளின்
பக்கவாட்டில் மீந்தொளிர்வது
பச்சை உலகின்
அணையா விழிகள்

மண்ணின்
நோய்மைப் பெருமூச்சுகள்
பேரூழியான காலங்களில்
கைவிட முடியாத
ஒற்றை நம்பிக்கையாக
அது மாறுகிறது

வெயிலை
உடுத்திய சிறார்கள்
சாறொழுகும் வாயோடு
புறங்களில் ஓட
காலத்தில் முளைத்த
கள்ளியோ
உடலின் விஷத்தையெல்லாம்
கனியாக
மாற்றிக்கொண்டிருக்கிறது.

No comments: