நெருப்பு எரிகிறது
அலையும் தழல்களில்
பூவாய் ஒரு தீற்றல்
நீரோடும் ஓடைத்தடத்தில்
முன்னோடியது
சர்ப்பச் சீறல்கள்
இந்தச் சொல்
சொல்லப்பட
அனந்த காலமாய்
உறைந்திருந்தது
அசையும் சிறகுகளோடு
இவ்வோவியத்தில் வந்து பதியும்
பறவையின் பெயர்
எனக்குத் தெரியாது.
இக்கணம்.
No comments:
Post a Comment