விரலிடைப் புகையும்
இந்த சிகரெட்டில்
என்னிடமில்லாத எதுவெல்லாம்
இருக்கிறதென்று நினைக்கையில்
நான்
போயிருக்கவேண்டிய இடங்களுக்கு
நீளும் தடங்கள்-
நினைவிலிருக்க வேண்டிய
கனவொன்றின் சம்பவங்கள்-
நான் மறுதலித்த யாசகம்-
எனக்கு மறுக்கப்பட்ட முத்தம்-
மூன்றாம் மனிதனுக்கொன்று
கரங்களிலிருந்து முகிழ்க்காத
அன்பின் வருடல்-
கொல்ல விரும்பியவனின்
உறைந்த ரத்தம்-
புரிபட மறுக்கும்
மரணத் தத்துவத்தின் நிழலென
என்னென்னவோ இருக்கின்றன
என் ஆஷ்ட்ரே மட்டும்
என்றும் நான்
விரும்பும் வண்ணம் நிரம்பித் ததும்புவது.
No comments:
Post a Comment