நடுமதியத்தில்

நடுமதியத்தில்
புகைவண்டி நிலையத்தின்
நடைபாதைக்கூரையின் கீழ்
முன் நாற்காலியில்
கருநிற முதுகு
பாதி தெரிய
உயரக்கொண்டை இட்டிருந்தவளின்
அடர்வண்ண
பூச்சணிந்த நீள நகங்கள்
பின் நீண்டு
தண்டுவடக் குழிவில்
ஒட்டியிருந்த
என் கண்களை பிடுங்கி
தண்டவாளங்கிடையில்
எறிந்தன

வெயிலில் நெளியும் தண்டவாளங்கள்
அதிரத்தொடங்கிய முதல் நொடியில்
கீழொன்றும் மேலொன்றுமாய்
பிணைந்து பறந்த வண்ணத்துப்பூச்சிகளை
கண்ட காட்சியை
கடைசி முறையாய்
நினைவிலிருந்து
மீட்டிவிட்டு
அணையத்துவங்கின கண்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நம்பிக்கையுணர்வின் மீதான சூதாட்டம் - கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) திரைப்படங்கள்

சிறுகதை எழுதுவது எப்படி

பருவத்தின் பேரொளி - The Museum of Innocence