கிறிஸ்டியன் பெட்ஸோல்டு (Christian Petzold) ஜெர்மானிய இயக்குனர். இதுவரை பதினொரு படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் அவருடைய வுல்ப்ஸ்பர்க் திரைப்படத்தைப் பார்த்தபோது அது வரிசையாக அவருடைய மற்ற படங்களிடம் அழைத்துச் சென்றது. அறுபத்தைந்து வயதாகும் பெட்ஸோல்டு இதுவரை பதினொரு படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் ஏழு திரைப்படங்களைக் பார்த்தேன். அந்த ஏழின் வழியாக பெட்ஸோல்டு கதையுலகத்தை ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடிந்தது. அவருடைய சமீபத்திய திரைப்படம் Miroirs No. 3 இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது
(01/03/2026 அன்று வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் இணையவழியில் நிகழ்ந்த சிறுகதைப் பயிற்சி முகாமில் பேசியவையின் கட்டுரை வடிவம்) புலம்பெயர் இலக்கியத்தின் கருப்பொருட்கள் சிறுகதை எழுதுவது எப்படி என்பதைப்பற்றி பேசுவதற்கு முன்னால் இந்த உரையாடலின் கருவான புலம்பெயர் வாழ்க்கையின் இலக்கியக் கருப்பொருட்கள் குறித்தும் பேசலாம். புலம்பெயர்தல் மனிதர்களுக்கு மிகப்பழைய விஷயம். ஆதிகாலத்தில் மனிதன் உணவுக்காக அலைந்து இடம்பெயர்வது நடந்தது. அப்படி அலைந்து திரிந்த, இன்னும் மொழி தோன்றியிராத காலத்திலும் மனிதனுக்கு தன்னுடைய நினைவைப் பதியவைக்கும் எத்தனங்கள் இருந்திருக்கின்றன என்பதற்கு குகை ஓவியங்கள் போன்றவை சாட்சியாக இருக்கின்றன. மொழி உருவானபிறகு அது மனித நினைவுகளின் பெட்டகமாக மாறுகிறது.
பல வருஷங்களுக்கு முன்பு, ஓரான் பாமுக் எழுதிய தி மியூசியம் ஆஃப் இன்னசென்ஸ் (வெகுளித்தனத்தின் அருங்காட்சியகம் என்றே இதை மனதில் கொண்டிருக்கிறேன், அறியாமையின் அருங்காட்சியகம் என்றல்ல) நாவலின் ஆங்கிலப் பதிப்பு வெளியானவுடன் உடனடியாக வாசித்தேன். அப்போது நாவல் பெரிதாக ஈர்க்கவில்லை. அது பாமுக்கின் முந்தைய படைப்புகளிலிருந்து சற்று கீழே இறங்கிவிட்டதாகத் தோன்றியது. நாவலின் அடிப்படையான ஆதார உணர்ச்சி பிடிபட்டாலும் அது வெகுஜனத் தன்மை உடைய நாவல் என்று தோன்றியது, இன்றைக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். சங்க இலக்கியம் தொடங்கி நாளது வரையான தமிழர்களின் கலையிலும் வெகுஜனக் கலாச்சாரத்திலும் காதல் ஒரு வதிபட்ட படிமம். நமது திரைப்படங்கள் காதலைத் துவைத்துக் காயப்போட்டிருக்கின்றன. நமது கற்பனையில் இருக்கும் வடிவத்தில், நிஜ வாழ்க்கையில் காதல் இல்லை.
கருத்துகள்