பிறிதோர் அன்பின்
பாடல் பெறாத
அகப்பரப்பில்
புறாக்களின் துயரக் கும்காரமென
உயிரின் வாதை கொள்ளும்
சப்தச்சூல்
படரும் கனவில் மின்னும்
பச்சை நட்சத்திரங்கள்
வெளிறும் இருளழிவில்
சாம்பலாய் நிறக்கிறது
வரும்பொழுது
நிமித்திகங்கள் ஏதுமற்ற
தனிமையின் கார நெடியோடு
பூக்கும் அன்றின் மலரெங்கும்
கல் மகரந்தகங்கள்
திசைகள் பூட்டப்பட்ட
இரவில் படரும்
யோனிகளின் தாய்மை வாசனையோ
தகிப்பில் பிறந்த
என் கைக்கிளைப் பாடல்களின்
அர்த்தங்களை திரித்து விடுகிறது.
No comments:
Post a Comment