Apr 13, 2015

அப் புறம்

தன்
உடலில்
வரையப்பட்டிருக்கும்
பச்சைக்கோட்டைகளில்
ஒன்றில்
மறையும்
நிழல்களை
ஏந்தி
இன்னொன்றின்
தாழ் நீக்கி
விட்டுக்கொண்டிருக்கிறது
நிலம்

அப் புறம்
நிழல்கள் வெகுகாலம்
சந்தோஷத்தோடு
வாழ்கின்றன.

No comments: