உன் ரூபம்
அதிதீவிரம் கொண்டது
நிலையழிந்த மனதின் முன்
கூரையின் கண்ணாடி ஓடென
ஒளிக்கற்றையை இறக்குகிறது
எதன் பொருட்டு
இந்த உடல்
இன்னும் ஒரு பிரேதமாக மாறாதிருக்கிறதென்று
எனக்குத் தெரியும்
அதோ அக்கடலில்
டால்பின்கள் துள்ளி
மடி புதைகின்றன மீண்டும்
உனக்குள் அழிவதுதான் உயிர்த்தெழல்
அதுவே என் தடயம்
உன் ரூபத்தின் லச்சினைகள்
என் எலும்புகளில்
ஆசிர்வாதமாக இறங்கட்டும்.
No comments:
Post a Comment