முறுக்கி முறுக்கி
உக்கிரவெயில் காயும்
இம்முற்பகலில்
நோய்மையின் மஞ்சள் பருந்து
தலைக்குள் பறக்கிறது
இரையைக் குதறும் ஓநாய்களைப்போல
நேற்றைய இரவை
சூறையாடிய துர்க்கனவுகளின் மிச்சங்களை
இரையைக் குதறும் ஓநாய்களைப்போல
நேற்றைய இரவை
சூறையாடிய துர்க்கனவுகளின் மிச்சங்களை
நினைவுகூர முயல்கையில்
அர்த்தப்பூர்வமானதாகவும்
அற்றதாகவும்
மாற்றிமாற்றி
வேசங்காட்டுகிறது வாழ்வு
இச்சுவர்களுக்குள் அணிவகுத்துப் போகும்
காலடியோசைகள்
செவிகளில் எதிரொலிக்கின்றன
நன்னம்பிக்கையைக் கொடுக்கும் ஒன்றிற்காக
கண்கள் வெயிலை அளைகையில்
தளர்வுற்ற உடலால் துய்க்கப்படாமல்
கைவிடப்படும் காமம்
துறவின் கண்ணொளி கொண்டு மறைகிறது
நோய் என்பது
நினைவுகளோடு தனித்துவிடப்படுவதுதான்
கண்ணோரங்களில் அவை
ஈரத்தைக் கசிவிக்கையில்
காலடியோசைகள் மறைந்துவிட்ட
சுவருக்குள் எழும்
புராதனகால தாயொருத்தியின் பாடல் கேட்டு
தலையிறங்கத் தொடங்கிய பருந்து
ஏனோ திசைமாறி
வெயிலுக்குள் பறக்கிறது.
அர்த்தப்பூர்வமானதாகவும்
அற்றதாகவும்
மாற்றிமாற்றி
வேசங்காட்டுகிறது வாழ்வு
இச்சுவர்களுக்குள் அணிவகுத்துப் போகும்
காலடியோசைகள்
செவிகளில் எதிரொலிக்கின்றன
நன்னம்பிக்கையைக் கொடுக்கும் ஒன்றிற்காக
கண்கள் வெயிலை அளைகையில்
தளர்வுற்ற உடலால் துய்க்கப்படாமல்
கைவிடப்படும் காமம்
துறவின் கண்ணொளி கொண்டு மறைகிறது
நோய் என்பது
நினைவுகளோடு தனித்துவிடப்படுவதுதான்
கண்ணோரங்களில் அவை
ஈரத்தைக் கசிவிக்கையில்
காலடியோசைகள் மறைந்துவிட்ட
சுவருக்குள் எழும்
புராதனகால தாயொருத்தியின் பாடல் கேட்டு
தலையிறங்கத் தொடங்கிய பருந்து
ஏனோ திசைமாறி
வெயிலுக்குள் பறக்கிறது.
No comments:
Post a Comment