முகில்கள் முதுகில் கிடக்க
வானெங்கும் ஏகித்திரியுமொரு பறவை
கனி கண்டவிடத்து புசித்தும்
துறைத்துளியருந்தி ஆறியும்
இணை இருக்குமிடத்து விழித்தும்
தனக்கு மட்டும் கேட்க்கும்
புனித இசையை தானிசைத்து
எச்சமிடும் மூங்கில்களின் மீது
மாய நீதிகளற்ற
வாழ்வின் மகத்துவத்தை
தானமரும் கிளைகளில்
பொறித்துப் போகுமது
எதிர்கொண்டதொரு நாள்
தன் சிறகுகளின்
மீதான சாபத்தை
வலைத்துளைகளிடையே தெரியுமெனினும்
வானென்று ஒப்பாத மனம்
குருதியின் நிணம் மணக்க
பிரகடனப்படுத்தியது ஜீவ சாசனத்தை.
ஏறிப் பறக்குமதன் சிறகுகளடியில்
புள்ளியெனக் குறுகுது பார்
பெருவானம்.
No comments:
Post a Comment