Oct 20, 2024

துரோகம்

ஒரு துரோகத்தை
கொஞ்சம் பயத்தோடுதான்
துவக்க வேண்டியிருக்கிறது

உருப்பெறுகையில்
பயம் பாதியாகிறது

செழித்தபின் சாதரணமாகிறது.

பின்னதுவொரு
உறுத்தாத கரும்புள்ளியாகிறது
மச்சத்தை போல.

No comments: