முறியும் கிளையில்
மலர்ந்திருக்கும் பூக்கள்
தேனீருக்குக் காசில்லாத
மழைநாள்
முகம் பதியவைத்துக்கொள்ளுமுன்
கடந்துவிடும் பேரழகிகள்
தாயற்ற சிசுவுக்கான
இரவல் தாலாட்டு
வாய்த்தும்
நிறைவில்லாப் புணர்ச்சி
போதாமைகளின் இடையில்
புன்னகைக்கிறார்
நம் கடவுள்
No comments:
Post a Comment