Oct 20, 2024

கூடல்

இருளெடுத்து வெட்கம் துடைக்கிறது
தாபம்

உடைகள் உதிர்த்த நிர்வாணம்
பாலின் வாசனை கொள்கிறது.

ஆயிரமாயிரம் வேர்கள்
மேனிப்பெரு நிலத்தை
துளைத்துயிர்க்கின்றன

முத்தங்களில் மிச்சமாகும் எச்சில்
தசையின் சுவை கூட்டுகிறது

காமத்தின் நுரைக்குமிழ்கள்
கற்பாறைகளாக
பரஸ்பரம் தேகங்கள்
மதுக்குப்பிகளாகின்றன

அணுக்கள் கடத்தும் நரம்புகளின்
ஆகக்கூடிய மென்மையை
கண்ணீர் நரம்புகள் எய்துகின்றன.

No comments: