பாழை அடைகாப்பவன்
நீ
நிரம்பி வழியும்
உன் சூனியவெளி
ஒளிச்சிதறலை வெறுக்கிறது
நீ
எரியூட்டிக்கொண்ட நம்பிக்கைகளின்
சாம்பற்புழுதி படிந்த
உன் சொற்கள்
புனிதங்களைக் கல்லாலடித்துக்கொண்டிருக்கின்றன
தவறவிட்ட
அவ்வொற்றைக்கணம்
நினைவுகளுக்குள்
ஆழம்போன முள்ளாய் கடுக்கிறது
குழையும் அந்தி மட்டும்
சற்றே உன்னில்
நிச்சலனத்தை விசிறுகிறது
அடர் இருளின்
பெருமெளனம்
உன் ஓலங்களை
எதிரொலிப்பற்று விழுங்கும்
பின்னிரவில்
யாதுமற்ற வெறுமையிடம்
யாசிக்கையில்
இரவு உன்னிடமிருந்து
எல்லாவற்றையும் களவாடிப் போகிறது.
No comments:
Post a Comment