Oct 20, 2024

குறுங்கவிதைகள்

விடிகாலைப் பொழுதொன்றில்
செத்துப்போவதாக
கனவு கண்டு
வியர்த்தெழுந்தேன்

விடிந்திருந்தது.
 
**
பிடிமானமற்ற கணத்தில்
கரையொதுங்கி
உயிர்க்காற்றிற்காய் தவித்து
துள்ளிக்குதித்த மீனின்
மரணத்தை வெறித்திருந்துவிட்டு
தூக்கி எறிந்தேன்

நீருக்குள்

No comments: