Oct 20, 2024

கடவுளைத் துறந்தவன்

உறுப்பை வெட்டிக்கொள்ளுதல்
என்றறிந்தே
அவன் கடவுளைத் துறக்கிறான்

கடவுள்
கலவாத நீர்
கலவாத உணவு
கலவாத தத்துவம்
கலவாத வாழ்வு
கலவாத மரணம்

அன்றேல் தன்னான்மாவை
ஒரு சிறு தெய்வமாகவேனும்
எங்கனம் ஸதாபிப்பது?

No comments: