கீற்றுகளிடை வெளவாலாய்
சாத்தான் தொங்கும்
ஒலைக்குடிசையில் வசிக்கிறான்
கடவுளோடு பேசுகிறவன்
உச்சிவேளையில் கடைசியாய்
ஒரு கோட்டை கள்ளருந்திவிட்டு
உறங்கப்போகும்
அவன் பகற்பொழுதுகள் கனவுகளற்றவை
அந்திவிழுந்த பின்னால்
குளிர்நீராடி நீறுதரித்து
முழங்கத் துவங்குகிறான்
கடவுளை அழைக்கும் இசையை
விண்ணப்பங்கள்
வேண்டுகோள்கள்
முறையிடல்கள்
நேர்த்திக்கடன்கள்
உக்கிரமிகுந்த பகலாய்
கடந்து முடியும்
முன்னிரவிற்குபின்
சாத்தானும் அவனும் தனியமர்கின்றனர்
கள் நிரம்பிய பானையோடு
தான் புகமுடியா
புலத்திற்கு வெளியே
தலைகீழாய் தொங்குகிறான்
கடவுள்.
No comments:
Post a Comment