நீண்ட பெருமூச்சொன்று வெளியேறுகிறது
துயரமிக்க ரணங்களை
தன்னில் சுமந்தவாறே
முடங்கிக் கிடந்த
மனசின் சிறகுகள்
மெல்ல விரிந்து மேலெழும்புகின்றன.
தழும்புகள் தந்திருக்கிறது
தாங்கும் தினவு
பாழ்நிறைந்த காலத்தை
எழுதி முடிக்கிறேன்
என் நாட்குறிப்பில்
ஆசுவாசக் கண்ணீர்
அழகாய்த்தான் வைக்கிறது
முற்றுப்புள்ளி.
No comments:
Post a Comment