Oct 20, 2024

வெயிலின் தேவதைகள்

கானலை உமிழும் பாலையில்
நீ பின்னுமுன்
பாடலை இசைத்துக்கொண்டிருந்தாய்

அது
குளிர்மை பற்றியன்றி
கானலின் வெம்மை பற்றியதாகவிருந்தது
இன்னுமெனக்கு பெருமகிழ்ச்சி

வெயிலின் தேவதைகள்
புகை வடிவில்
உன் பாடலை
ஆலிங்கனம் செய்ய
இன்னும் மெருகேறித் ததும்புகிறது
உன் குரல்

கள்வெறியில்
கானலை இறைத்தாடுமென்
துணுக்குறலெல்லாம்
நாம் கடந்துவிட்டபின்
கிழக்கிருக்கும்
இப்பகல் நிலவின்
முன்னிரவு பற்றிய துயரங்களே.

No comments: