சிற்றோடைக்குள்
உறைந்தவொரு கூழாங்கல்
கரைகளற்ற வானில்
ஒற்றையாய் மினுக்கும்
பின்னிரவு நட்சத்திரம்
இசை முடிந்த பொழுதில்
மெலிதாய்த் துவங்கும்
பேரமைதியின் கீற்றிசை
இரவின் முதல் பனித்துளி
கொள்ளும் பச்சையம்
மலைமுகட்டு ஒற்றைப்பூவை
கழுவிப்போகும் காற்று
உன் அன்பின் சாரலோ
பிரபஞ்சத் தாய்மையோடு
என்னில் பொழிகிறது.
No comments:
Post a Comment