Oct 20, 2024

இளமை

பெருஞ்சோறு தின்று
கொடும்புகை இழுத்து
முயங்கி முயங்கி மதுவருந்தி
சிறுகொடியிடை மாதர்
பெருமுலை பார்த்து
கிறுக்கலாய் கவிதைகளெழுதி
நாற்றம் பூத்த உடலில்
சுகங்கள் கீறி
வானம் பார்த்து
கனவுகள் நெய்து
உதட்டுச்சிரிப்போடு
உள்ளழுது கழியும் இவ்விளமை
எரிந்து வீழுமொரு
நட்சத்திரமன்றி வேறென்ன?

No comments: